download: Pdficon.png
Printpdficon.png
Odticon.png
Version: 2.0

பரிசுத்த வேதாகமம் வாசிப்பதற்கான குறிப்புகள்

அவர் யார், அவர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ள கர்த்தர் அவருடைய வார்த்தைகளை நமக்கு தந்தார். அவரை நன்கு புரிந்துகொள்வதற்கும் அவர் சொல்வதைச் செய்வதற்கும் நாம் அதைப் படிக்கிறோம். இந்த கோட்பாடுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவைகளே. கேள்வி: எங்கு படிக்கத் தொடங்குவது? உங்கள் சூழ்நிலை மற்றும் பின்னணியைப் பொறுத்து நாங்கள் வெவ்வேறு பரிந்துரைகளை வழங்குகிறோம். இந்த பதிப்புகளில் புத்தக அடையாளக் குறியின் முக்கிய அமைப்பு ஒன்றுதான், பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு மட்டுமே வேறுபட்டது. லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளுடன் படிக்கத் தொடங்க பரிந்துரைக்கும் “நிலையான”பதிப்பை நீங்கள் கீழே காணலாம்.

பரிசுத்த வேதாகம வாசிப்புக் குறிப்புகள் (நம்பிக்கை நிறைந்த ஏழு கதைகள்)

  • புதிய ஏற்பாட்டிலிருந்து ஏழு கதைகளின் தேர்வு அடங்கும்
  • “நவீன மேற்கத்திய” பின்னணி கொண்டவர்களுக்கு நல்லது.

பரிசுத்த வேதாகம வாசிப்புக் குறிப்புகள்(பரிசுத்த வேதாகமத்திலிருந்து தொடங்கி)

  • ஆதியாகமம், மத்தேயு மற்றும் அப்போஸ்தலர் நடபடிகைகள் ஆகியவற்றுடன் படிக்கத் தொடங்கவும்.
  • உதாரணம்:முஸ்லீம் சமூகங்களிலிருந்து வந்த மக்களுக்கு நல்லது.

வேத வாசிப்பு குறிப்புகள்

நீங்கள் வேதாகமத்தைப் படிக்கத் தொடங்கும் போது, பின்வரும் புத்தகங்களுடன் தொடங்குங்கள்:

1. லூக்கா
2. அப்போஸ்தலர்

நீங்கள் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஜெபத்துடன் தொடங்குங்கள்: நீங்கள் படிக்க இருக்கும் வேதங்களை புரிந்துகொள்ள கர்த்தர்தாமே உதவும் படியாய் அவரை நாடுங்கள்.

வேதப் பகுதிகளை நன்கு அறிந்து கற்றுக்கொள்ள கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு (மறுபுறம் காண்க) பதிலளிக்கவும்.

உங்கள் எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குறிப்புகளையும் எடுங்கள்.

ஒரு குழுவாக கண்டறியும் வேத ஆராய்ச்சி

சந்திப்பின் கோடிட்டுகள்:

1. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
2. பொறுப்புணர்வு
நீங்கள் கடந்த அமர்விலிருந்து என்ன நடைமுறைப்படுத்தினீர்கள்?
3. நன்றி தெரிவித்தல்
கடந்த வாரம் நீங்கள் அனுபவித்த நல்ல விஷயங்களை எண்ணி கர்த்தரை துதியுங்கள்.


4. வாசித்தல்
வேத பகுதியை ஒன்றாக வாசிக்கவும். படித்ததை புரிந்துகொள்ள கர்த்தரிடம் உதவி கேளுங்கள்.
5. மீண்டும் சொல்
வாசித்த வேதத்தை மீண்டும் ஒன்றாக சொல்லுங்கள், ஆனால் இம்முறை வேதத்தை பார்க்காமல்.
6. விடையளி
வாசிக்கப்பட்ட வேதப் பகுதியைப் பற்றிய பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
Head-32.pngதலை: நாம் இதில் என்ன கற்றுக்கொள்கிறோம்? (கர்த்தரைப் பற்றி/ மக்களைப் பற்றி/…)
Heart-32.png இதயம்: என்ன என் இதயத்தைத் தொடுகிறது? (அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? நான் எப்படி உணர்கிறேன்...?)
Hands-32.png கைகள்: இதை எப்படி நம் வாழ்வில் கடைப்பிடிக்கலாம்? (பின்பற்ற வேண்டிய உதாரணம்? இதை யாருடன் பகிர்ந்து கொள்ளலாம்?)



7. இலக்குகள்
அடுத்த சந்திப்பு வரை தனிப்பட்ட இலக்குகளை அமைக்கவும்.
8. ஜெபியுங்கள்
ஒருவருக்கொருவர் ஜெபிக்க நேரம் ஒதுக்குங்கள்.

விதிகள்:

  • தேர்ந்தெடுத்த வேதத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்
  • அனைவரின் பங்கேற்பையும் மதியுங்கள்
  • ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்