Version: 2.1

ஞானஸ்நானம்

From 4training
Revision as of 14:24, 27 February 2019 by Tadmin (talk | contribs) (Created page with "ஞானஸ்நானம்.doc")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Other languages:
Albanian • ‎Arabic • ‎Chinese • ‎Czech • ‎English • ‎German • ‎Hausa • ‎Indonesian • ‎Persian • ‎Polish • ‎Spanish • ‎Swedish • ‎Tamil • ‎Telugu • ‎Turkish • ‎Turkish (secular) • ‎Vietnamese
More information about Tamil

கதை

(மத்தேயு 3:11, 13:17, 28:18-20)

இயேசு கிறிஸ்து போதிப்பதற்கும், நோயுற்றவரகளைச் சுகப்படுத்துவதற்கும் சற்று முன்னராக, அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றப்படுவார். மக்களைப் பாவங்களிலிருந்து மீட்டு விடுதலை பெறுதற்காக மீட்பர் மிக விரைவில் வரவிருக்கிறார் என யோவான் என்ற பெயருடைய தீர்க்கதரிசி ஒருவர், அங்குள்ள மக்களை வரும்படி அழைத்தார். அவர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

இயேசு கிறிஸ்து பாவமன்னிப்புக் கேட்க அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. எனினும், அவர் யோவான் என்பவரால் ஞானஸ்நானம் செய்யப்படுவார். ஏனென்றால் அது நம்க்கோர் உதாரணமாக இருப்பதற்காகவும், அதனை நாமும் பின்பற்றுவதற்காகவும், இயேசு கிறிஸ்து அவருடைய செய்தியை ஏற்றுக்கொண்டார். யோவான் இயேசு கிறிஸ்துவை முதலில் ஞானஸ்நானம் செய்ய விரும்பவில்லை. யோவான் இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூறினார், “நான் உம்மால் அல்லவோ ஞானஸ்நானம் பெறப்பட்டிருக்கவேண்டும்”. இயேசுநாதர் தம்மிலும் மிக உயர்ந்தவரென்பது யோவானுக்கு நன்கு தெரியும். எவ்வாரெனினும், பின்னர், இயேசுநாதர் யோவானை நோக்கி, “ இப்போது இடம் கொடு, இப்படி எல்லா நீதிகளையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது”, என்றார். அப்போது யோவானும் அதனை ஏற்றுக் கொண்டு, இயேசுநாதரை ஞானஸ்நானம் செய்தார்.

இயேசு கிறிஸ்துவை யோவான் ஞானஸ்நானம் செய்தார். அவர் நீரின் அடியில் மூழ்கி, பின்னர் அவர் நீரின் மேலே வந்தபோது, (வா’னத்திலிருந்து) பரலோகத்திலிருந்து கர்த்தரின் குரல் ஒலித்த்து. “என்னை நேசிப்பவரும்,மிகவும் ஆனந்தமாகவுமிருக்கும் இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் நான் பிரியமாக இருக்கிறேன்” என உரைத்தது

அவருடைய ஊழியம் பூமியில் நிறைவேறிய பின்னர், இயேசு கிறிஸ்து, அவருடைய சீடர்களுக்கு, நீஙகள் புறப்பட்டுச் சென்று, சகல உலக மக்களையும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து அவர்களைச் சீடர்களாக்கும்படி கட்டளை இட்டார். சீடர்களும், இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு அமைய உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பிய சகல மக்கள் அனைவரையும் ஞானஸ்நானம் செய்தனர்.

பயிற்சி இக் கதையைத் திரும்பவும் சொல்லுதல்!

வினாக்கள்

  1. இக் கதையிலிருந்து, நீர் ஞானஸ்நானம் பற்றி என்ன கற்றீர்?
  2. நீர் எதற்குக் கீழ் படிய வேண்டும்?

ஞானஸ்நானம் என்பதன் பொருள்

ஞானஸ்நானம் என்ற சொல்லின் பொருள் (அர்த்தம்) நீரில் அமிழ்த்துதல், நீரில் மூழ்குதல்,(முழுக்கு,) நீரில் கழுவுதல், அலசுதல் என்பனவாகும். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் செய்யப்பட்டபடியினால்,அவரை விசுவாசிப்பவர்களும், பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் அவரைப் போல் ஞானஸ்நானம் எடுக்கவேண்டியது அவசியமாகும். மத்தேயுவின் சுவிசேஷத்தின் இறுதியில், இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களுக்குக் கட்டளை இட்டார் “...பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள் “ (மத்தேயு. 28:19) இந்த வசனத்தினை அப்போஸ்தலருடைய நடபடிகள் (2:38இல்) மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

பேதுரு (Peter) அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி, பாவமன்னிப்புப் பெற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போது பரிசுத்த ஆவியின் வரத்தினைப் பெறுவீர்கள்”. (அந்த வசனங்களை ஞாபகப்படுத்தவும்).

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாத்தினால் முழுகுதல்...

பாவமன்னிப்புக் கோரலும் மனம் திரும்புதலும்

நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்பதனால், அப்பாவங்களிலிருந்தும் நாம் விடுபடலாம். (விடுதலை அடையலாம்) நாம் எல்லாக் குப்பை குழங்களையும் கம்பளத்தின் கீழ்பகுதியில் கூட்டித் தள்ளி விடமுடியாது. நாம், ஒவ்வொரு பாவத்திற்கும் பெயரிட்டு, அவற்றிக்காகப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் (1 யோவான் 1:9). கர்த்தரின் விருப்பத்திற்கு விரோதமாக நாம் வாழ்ந்ததை நாம் பேச வேண்டும். நம்மை மன்னிக்கவும், கர்த்தரை ஜெபிக்க வேண்டும். பின்னர் இத்தகைய செயல்களை செய்வதை நிறுத்தும்படியும் கர்த்தரிடம் நாம் கேட்க வேண்டும். கர்த்தரின் துணையோடு நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கர்த்தரின் விருப்பத்தின் பிரகாரம் நாம் வாழவேண்டும்.

குமாரனின் நாமத்தால் நீரில் முழுகுதல் (கழுவுதல்)...

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம்

தண்ணீர் ஞானஸ்நானம் என்பதை “மறு ஜென்ம முழுக்கு” என்று அழைக்கப்படும் (தீத்து 3:5). இதன் பொருளினை ரோமரில் 6: 1- 11ல் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
பிதாவின் (கர்த்தர்) மகிமையினாலே இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து எழுப்ப்ப்பட்டது போல் நாமும், புதிய ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு அவருடைய மரணத்துள்ளாக்கும் ஞானஸ்நானத்தினால் புது வாழ்வு பெறுவோம். நமது பழைய மனுஷ பாவசரீரம் இறந்து போக, இது போல் நாமும் “பாவத்தின் அடிமைகள் இல்லாது” விடுதலை பெறுவோம். இதன் பொருள் என்னவெனில், இனி மேல் எம்மில் எந்தப் பாவமுமில்லை, நாம் இப்போது புதிய சிருஷ்டி (மறுபிறவி) பெற்றுள்ளோம் (2 கொரிந்தியார் 5:17). ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதுச் சிருஷ்டியாயிருக்கின்றான், பழையன ஒழிந்து போயின, எல்லாம் புதியனவாயின.

பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம்...

கர்த்தரின் பரிசுத்த ஆவியைப் பெறல்

கர்த்தர் அவருடைய பரிசுத்த ஆவியான வரத்தினை (சக்தி) நமக்குத் தர விரும்புகிறார். பரிசுத்த ஆவி என்பது நமக்கு கர்த்தரின் சக்தி, வலிமை போன்றது. கர்த்தர் நமக்கு, அவரின் விருப்பங்களைச் செய்வதற்கும்,சாத்தானை எதிர் கொள்ளவும் துணை செய்வார். பரிசுத்த ஆவி என்ற கனியால்,அன்பு, சந்தோசம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் போன்ற நற்குணங்கள் வளரும் (கலாத்தியர் 5:22). நாம் பரிசுத்த ஆவியின் வரத்தினைப் பெற்றதும், நம்முள் ஏதோ மாற்றம் ஏற்படுவது போல் வெளியிலும் ஏற்படும். (உதாரணம். அப்போஸ்தலர் நடபடிகள்:19:6). நாம் தெய்வீக வரத்தினைப் பெறுவோம். (கொரிந்தியார். 12:1-11.,14:1-25). நாம் இந்த அற்புத வரத்தின் (சக்தியின்) துணை கொண்டு, கர்த்தரின் மகிமையை மற்றவர்களும் அனுபவிக்கவும், அவர்களையும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக்கவும் பயன்படுத்த வேண்டும்.

நமது ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகுதல்

நீர், கர்த்தர் மேல் வைத்துள்ள நம்பிக்கையை( விசுவாசத்தை) உமது ஞானஸ்நானம் மூலம் கொண்டாடலாம்!

  • எப்போது ஞானஸ்நானம் செய்வது?
  • நாம் யார் யாரை இவ்வைபவத்திற்கு அழைப்பது?
  • உமது இந்த ஞானஸ்நான வைபவத்தில், கர்த்தர் உம்மை எப்படி விடுவிதித்தார் (மாற்றினார்) என்ற கதையை அங்குள்ளவர்களுக்குக் கூறத் தயார் செய்யவும்.

மிக விரைவில் ஞானஸ்நானம் செய்வதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஞானஸ்நானத்திற்குரிய வினாக்களை வாசித்து அதற்கான விடைகளையும் தெரிந்து கொள்ளவும்.

ஞானஸ்நானத்திற்குரிய வினாக்கள்

  1. உமது பாவங்களுக்காகக் கர்த்தரிடம் பாவமன்னிப்புக் கேட்பீரா?
  2. இயேசு கிறிஸ்து, நமது பாவங்கள் எல்லாவற்றையும் தாமே ஏற்று, அவர் சிலுவையில் மரித்தார் என்பது உமக்குத் தெரியுமா?
  3. பழைய மனுஷ உடலை (அடக்கம் செய்து) விட்டு கர்த்தருடன் புதிய வாழ்வினைத் தொடங்க நீ ஆயத்தமாய் உள்ளீரா?
  4. இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பினபற்றவும், அவற்றிலிருந்து எப்பொழுதும் மாறாதிருக்கவும், நீ தீர்மானித்துள்ளீரா?
  5. மற்றவர்கள் உம்மைக் கேலி செய்தாலோ,அடித்துத் துன்புறுத்தினாலோ, உமது குடும்பத்தினர் உன்னை வீட்டிலிருந்து வெளியேற்றினாலோ,அல்லது வேறு எந்தக் கஷ்டங்கள் நேர்ந்தாலும், நீ இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவாயா?
  6. நீ, கர்த்தரின் பரிசுத்த ஆவியின் வரத்தினைப் பெற வேண்டுமா?