Version: 2.0

தேவாலயம்

From 4training
Revision as of 08:05, 3 May 2020 by Rajah (talk | contribs) (Created page with "இங்கே நாம் மூன்றாவது பொருளைப் பார்க்கிறோம். எந்த கூறுகள் ஒரு தனி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Other languages:
Albanian • ‎Dutch • ‎English • ‎French • ‎German • ‎Indonesian • ‎Kyrgyz • ‎Malayalam • ‎Spanish • ‎Tamil
More information about Tamil

ஒரு குடும்பமாக தேவாலயம்

Family.png

கர்த்தரின் சன்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு மறுபிறவி எடுக்கும்போது, ​​நாங்கள் கர்த்தரின் குடும்பத்தில் உறுப்பினராகின்றோம். ஒவ்வொரு ஆன்மீக குழந்தைக்கும் ஒரு ஆன்மீக குடும்பம் தேவை. கர்த்தர் நம்முடைய பரலோகத் தந்தை, இயேசுவின் சீடர்களாகிய நாம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். குடும்பம் என்றால் கர்த்தரின் பிள்ளைகளாக நாம் யார் என்பதை அறியவும் வளரவும் ஒரு பாதுகாப்பான இடமுமாகும். குடும்பம் பராமரிப்பை வழங்குவதோடு, மேலும் உறவுகளில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்கின்றோம்.

ஒர் உடலான தேவாலயம்

Body.png

நாங்கள் இயேசு கிறிஸ்துவின் உடல் - புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான உறவை விவரிக்கின்றது. ஒரு உடல் என்றால் எல்லோரும் ஒரு அங்கம் மற்றும் ஒரு சிறப்பு பங்கு உண்டு. இயேசு கிறிஸ்து தலை; நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும், இதனால் அவர் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நம்மை வழிநடத்த முடியும். ஒரு உடல் செயல்படுவதைப் போலவே நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் நாம் இயேசு கிறிஸ்துவை ஒத்திருக்கிறோம், அவர் நம் மூலமாக செயல்பட முடியும்.

ஒர் அணியான தேவாலயம்

Team.png

ஒர் அணி என்பது ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்யும் நபர்களின் குழுவாகும். அவர்கள் ஒன்றாகப் பயிற்சியளித்து இலக்கை அடைய தேவையானதைச் செய்கிறார்கள். தம்முடைய தேவாலயம் தம்முடைய ராஜ்யத்திற்காக ஒன்றுபட வேண்டும் என்று இயேசு கிருஸ்து விரும்புகிறார். நாங்கள் யாருடன் ஒர் அணியை உருவாக்க முடியும், யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை கர்த்தர் நமக்குக் காட்டுகிறார்.

ஆகவே, “தேவாலயம்” என்பது ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்களின் குழு என்பது தெளிவாகிறது. தேவாலயம் என்னும்போது, அதாவது பூங்காக்கள், பாடசாலைகள், தேர்நீர்க் கடைகள், தேவாலயக் கட்டிடங்கள், அலுவலகங்கள், மற்றும் வீடுகள் அல்லது நிகழ்நிலைகளில் சந்திப்பதைக் குறிப்பதாகும் .

தேவாலயத்தின் மூன்று படங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கும்? (ஒரு குடும்பமாக, ஒர் உடலாக, ஒர் அணியாக)

அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் தேவாலயம்

புதிய ஏற்பாட்டில், “தேவாலயம்” என்ற சொல் மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது:

  1. உலகில் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் (உலகளாவிய “கிறிஸ்துவின் உடல்”)
  2. ஒரு நகரத்தில் / ஒரு பிராந்தியத்தில் இயேசுகிருஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் எடுத்துக்காட்டு: “எருசலேமில் உள்ள தேவாலயம்” (அப்போஸ்தலர் நடபடிகள் 11:22)
  3. தவறாமல் ஒன்றுகூடும் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் குழு. எடுத்துக்காட்டாக: “பிரிஸ்கில்லா மற்றும் அக்விலாவின் வீட்டில் நடத்திய வீட்டுத் தேவாலயங்கள்” (ரோமர் 16: 5)

இங்கே நாம் மூன்றாவது பொருளைப் பார்க்கிறோம். எந்த கூறுகள் ஒரு தனிப்பட்ட தேவாலயத்தை உருவாக்குகின்றன?

அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்தல். 2:37-47.

தேவாலயத்தின் கூறுகள்..

ஞானஸ்தானம்.

"ஞானஸ்நானம்" என்ற சொல்லின் அர்த்தம் என்னவெனில்"மூழ்குவது, முழுக்கு", சுத்திகரிப்பு அல்லது கழுவுதல் என்பதாகும். இயேசு கிருஸ்து ஞானஸ்நானம் பெற்றதைப் போலவே, நாமும் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் கர்த்தருடன் சேர்கின்றோம். இயேசு கிருஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு கட்டளையிடுகிறார்: "... பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள்." (மத்தேயு 28:19)

அப்போஸ்தலர்நடபடிகள் 2:38 ஐ மீண்டும் படியுங்கள், இது எவ்வாறு விளக்குகிறது மற்றும் "மறுபிறப்பின்" முக்கிய பகுதிகளைக் காட்டுகிறது என்பதைப் பாருங்கள்:
நாங்கள் மனந்திரும்பி எங்கள் பழைய வாழ்க்கையை அடக்கம் செய்கிறோம். இயேசு அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த அதே வழியில், ஞானஸ்நானத்தில் தண்ணீருக்கு அடியில் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் தண்ணீரிலிருந்து வெளியே வருகிறோம் (ரோமர் 6: 1-11). எங்கள் புதிய குடும்பத்தில், இயேசு கிருஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட முற்றிலும் புதிய வாழ்க்கை முறையைத் தொடங்குகின்றோம். (மேலும் விவரங்களுக்கு “ ஞானஸ்நானம்” என்ற வேலைத்தாளைப் பார்க்கவும்).

கர்த்தரின் கடைசி இராப் போசனம்.

இயேசு கிருஸ்து கர்த்தருடைய இராப்போஜனத்தை அமைத்தார், இதனால் அவருடைய மரணத்தையும் அவருடைய பாவங்களுக்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதையும் நினைவில் கொள்கின்றோம் (லூக்கா 22: 15-20). இயேசு கிருஸ்து நமக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி சிந்திக்கவும் நன்றி செலுத்தவும் நாம் நேரம் எடுத்துக்கொள்கின்றோம். நம்மிடம் இருக்கும்போது, ​​நம்முடைய செயல்களை ஆராய்ந்து நம்முடைய பாவங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 11: 23-29, வேலைத்தாள் “ பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்புதல்” ஐயும் காண்க.

உடன்படிக்கை.

ஞானஸ்நானம் பெற்ற ஒரு குழு இப்போது இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்கிறார்கள், தங்களை ஒரு தேவாலயமாகக் காணத் தொடங்குகிறார்கள், மேலும் கர்த்தரின் விருப்பத்தை ஒன்றாகச் செய்வதில் ஈடுபடுகிறார்கள்.

தலைவர்கள்.

ஆரோக்கியமான தேவாலயங்களில் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்ட தலைவர்கள் உள்ளனர், மேலும் அவர்களின் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள்.

வழங்குதல்.

கர்த்தருக்கு நன்றி செலுத்தும் அன்பளிப்புகளை வழங்குவதும் வழிபாட்டு செயல்களாகும். எங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் கர்த்தருக்கு தியாகங்களை வழங்குகின்றோம், எடுத்துக்காட்டாக, எங்கள் நேரம் மற்றும் எங்கள் திறன்களுடன். நம்முடைய பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் கொடுக்கும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டார். கர்த்தரின் குடும்பத்தில் - அவருடைய உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் இராச்சியம் கொடுக்க இது ஒரு முக்கியமான வழியாகும்.

வழிபாடு. (பிராத்தனை)

நாங்கள் கடவுளைப் புகழ்கிறோம், அவருடைய முன்னிலையில் இருக்கிறோம்.

தேழமை(கூட்டுறவு)

நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக அக்கறை கொள்கின்றோம், அத்தோடு ஒருவருக்கொருவர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றோம்.

ஜெபம் பண்ணுதல்

நாம் ஒன்றாகச் சேர்ந்து கர்த்தருடன் பேசுகிறோம்.

பயிற்சி.

நாம் பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, அன்றாட வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிய அனைவருக்கும் கற்பிக்கின்றோம்.

பெருக்கல்.

நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டு பரிசுத்த ஆவியின் சக்தியால் சீடராக்குகின்றோம்.



ஒரு குழுவாக இப்போது நேரத்தை எடுத்து மதிப்பீடு செய்யுங்கள்: உங்கள் குழுவில் இந்த கூறுகள் எவை உள்ளன?

தேவாலயத்தின் கர்த்தரின் இலட்சியத்தை நீங்கள் நெருங்க உங்கள் அடுத்த படிகள் என்ன? (நீங்கள் எதைச் சேர்க்க வேண்டும்? உங்கள் நேரத்தை வித்தியாசமாக எங்கே பயன்படுத்த வேண்டும்? போன்றவை)