Translations:Baptism/19/ta
நமது பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்புக் கேட்பதினால், அபந்தப் பாவங்களிலிருந்தும் நாம் விடுபடலாம். (விடுதலை அடையலாம்) நாம் எல்லாக் குப்பை குழங்களையும் கம்பளத்தின் கீழ்பகுதியில் கூட்டித் தள்ளி விடமுடியாது. நாம்,ஒவ்வொரு பாவத்திற்கும் பெயரிட்டு,அவற்றை அறிக்கையிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் (1 யோவான் 1:9). கர்த்தரின் விருப்பத்திற்கு விரோதமாக நாம் வாழ்ந்ததை நாம் பேச வேண்டும்.நம்மை மன்னிக்கவும்,கர்த்தரை ஜெபிக்க வேண்டும்.பின்னர் இத்தகைய செயல்களை செய்வதை நிறுத்துவதற்கு உதவும்படியும் கர்த்தரிடம் நாம் கேட்க வேண்டும். கர்த்தரின் துணையோடு நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கர்த்தரின் விருப்பத்தின் பிரகாரம் நாம் வாழவேண்டும்.