Translations:Bible Reading Hints/1/ta
அவர் யார், அவர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ள கர்த்தர் அவருடைய வார்த்தைகளை நமக்கு தந்தார். அவரை நன்கு புரிந்துகொள்வதற்கும் அவர் சொல்வதைச் செய்வதற்கும் நாம் அதைப் படிக்கிறோம். இந்த கோட்பாடுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவைகளே. கேள்வி: எங்கு படிக்கத் தொடங்குவது? உங்கள் சூழ்நிலை மற்றும் பின்னணியைப் பொறுத்து நாங்கள் வெவ்வேறு பரிந்துரைகளை வழங்குகிறோம். இந்த பதிப்புகளில் புத்தக அடையாளக் குறியின் முக்கிய அமைப்பு ஒன்றுதான், பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு மட்டுமே வேறுபட்டது. லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளுடன் படிக்கத் தொடங்க பரிந்துரைக்கும் “நிலையான”பதிப்பை நீங்கள் கீழே காணலாம்.