Translations:Family and our Relationship with God/2/ta
தேவன் நம்மைச் சிருஷ்டித்தார். அவருடைய படைப்பின் அற்புதத் தன்மையைப் பார்க்கும்போது,அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள எந்த வழியும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம்.ஆனால் அவர் தன்னைப் பற்றிய அம்சங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், அதனால் நாம் அவரை மேலும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அவர் ஒருவராக இருந்தாலும்,அவர் மூவராகவும் இருக்கிறார் - எனவே அவருடனான நமது உறவு இந்த மூன்றோடும் உள்ளடக்கியது.இந்த மூவரில் ஒருவரை நாம் மற்றவர்களை விட நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் நாம் பிதா,குமாரன்,(இயேசு கிறிஸ்து)மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவருடனான உறவுகளில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும்: