Translations:Forgiving Step by Step: Training Notes/19/ta
உங்களிடம் ஒரு நல்ல கிதார் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்,நான் உங்களிடம் வந்து,"ஒரு நாளைக்கு உங்கள் கிதாரை எனக்குத் தரலாமா?"என்று கேட்க, நீங்களும் "நிச்சயமாகத் தருகிறேன்,ஆனால் தயவுசெய்து அதை கவனமாகப் பாவியுங்கள்" என்று நீங்கள் பதிலளிக்கிறீர்கள்.அடுத்த நாள் நான் கிதாரைத் திருப்பிக் கொடுக்கிறேன், ஆனால் அதில் இப்போது பெரிய கீறல்கள் உள்ளன, நான் சொல்கிறேன்,“ஆம், எனக்கு குழந்தைகள் இருப்பதால் அது நடந்தது. ஆனால் அதன் சத்தம் இன்னும் அப்படியே ஒலிக்கிறது." நீங்கள் கோபமாகவும் சோகமாகவும் இருக்கிறீர்கள்.ஆனால் இறுதியாக நீங்கள் என்னை மன்னிக்க முடிவு செய்தீர்கள், ஏனென்றால் கோபமாக இருப்பது பயனளிக்காது