Translations:Forgiving Step by Step: Training Notes/57/ta

நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டீர்கள், பட்டப்படிப்பு வரப்போகிறது. அதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்லி அவர்களை அழைக்கிறீர். "நாங்கள் நிச்சயம் வருவோம் !"என்று உங்கள் தந்தை கூறுகிறார்.
பட்டமளிப்புத் தினத்தன்று உன்னுடைய எல்லா நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எல்லா மக்களும் நன்றாக உடை அணிந்து வந்துள்ளனர்.ஆனால் யார் வரவில்லை? உங்கள் தந்தை. நீங்கள் உண்மையிலேயே சோகமாகவும் வருத்தமாகவும் இருக்கிறீர்கள். இந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு உங்கள் தந்தையை மன்னிக்க வேண்டும் என்று பிறகு முடிவு செய்கிறீர்கள்.
ஆனால் பின்னர், இது உண்மையில் உங்கள் தந்தை எப்போதும் இந்த மாதிரியே நடப்பது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்:அவர் ஏதாவது வாக்குறுதி கொடுப்பார்.ஆனால் அதை அவர் நிறைவேற்ற மாட்டார். உண்மையிலே அவர் உங்களுக்குத் தேவைப்படும்போது,​​​​அவர் வேலைப்பழுவிலே இருந்தார். இப்போது அவர் பட்டப்படிப்புக்கு வராததற்காக அவரை மன்னித்துவிட்டீர்கள்,ஆனால் இதே போன்ற பல சூழ்நிலைகள் உள்ளன. இந்த வேதனைகளிலிருந்து விடுபட, நீங்கள் மீண்டும் மன்னிக்கும் வழிகளைக் கடந்து செல்ல வேண்டும்,மேலும் அவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்த மற்ற நேரங்களில் அவரை மன்னிக்க வேண்டும்.