Translations:Overcoming Negative Inheritance/10/ta

கரோல் திருமணம் செய்து கொள்ளவிருந்தபோது,​​​​தனது வருங்காலக் கணவன் தன்னை விவாகரத்துச் செய்து விடுவானென்று அவள் தொடர்ந்து பயப்படுவதை அவள் உணர்ந்தாள். ஜெபத்தில்,அவளுடைய குடும்பத்தில் ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்து இருப்பதைக் கர்த்தர் அவளுக்குக் காட்டினார். அவளது தாத்தா உணர்ச்சிவசப்பட்டு பாட்டியிடம் இருந்து விலகிவிட்டார்,அவளுடைய தந்தை அவளது தாயை விவாகரத்துச் செய்தார், இதன் விளைவாக "ஆண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல" என்ற பொய்யான மாயையை ஏற்படுத்தியது.அந்த எதிர்மறையான பரம்பரை ஆஸ்தியுடன் தொடர்புடைய அனைத்தையும் மன்னித்து, விலகிய பிறகு,அவள் இந்த பயங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி நிறைந்தவளானாள்.