Translations:Overcoming Negative Inheritance/13/ta

ஆரம்பத்தில்,நமது ஈடுபாட்டு உணர்வில்லாது இல்லாமையால் எங்கள் எதிர்மறையான பரம்பரைச் சொத்தைப் பெற்றோம்.ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,அந்த பரம்பரைச் சொத்தின் பாவங்களுடனும், அடிப்படையான பொய்களுடனும் நாம் - உணர்வுபூர்வமாகவோ அல்லது அறியாமலோ - கூட்டாளியாக ஆரம்பித்தோம்.ஆகவே, நம் முன்னோர்கள் செய்தது போல் நாமும் அந்தப் பாவத்தில் குற்றவாளியாகி விட்டோம்.உண்மையில் விடுதலை பெற,நாம் இந்த பாவத்தை கர்த்தரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும் - அதை நிராகரித்து அதிலிருந்து வெளியேற வேண்டும். நாம் பொதுவாக ஜெபிக்கலாம் மற்றும் நம்முடைய பரம்பரை இயேசு கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படட்டும்; ஆனால்,எந்தெந்தப் பகுதிகளில் நாம் ஏற்கனவே பாவங்களை நம் வாழ்வில் ஒருங்கிணைத்துள்ளோம், அவற்றைத் தொடர்ந்தும் செய்து வருகிறோம் என்பது நமக்குத் தெரியாவிட்டால், பெரிய மாற்றங்களைக் காண முடியாது.அதனால்தான், நம்முடைய பரம்பரையிலுள்ள ஆரோக்கியமற்ற பகுதிகள் என்ன என்பதை இயேசு கிறிஸ்து நமக்குக் காண்பிப்பது முக்கியம். நாம் ஏற்கனவே நம் முன்னோர்களின் பாவங்களைச் செய்துகொண்டிருந்தால், ஆரோக்கியமற்ற பரம்பரைச் சொத்துக்களை எளிதாக மறுப்பது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையிலும் அதிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும்.