Translations:Overcoming Pride and Rebellion/18/ta
நாம் அதை விரும்பாமல் இருக்கலாம்,ஏனெனில் அது நமக்கு செலவாகும்: நாம் வரி செலுத்த வேண்டும் அல்லது நாம் தேர்ந்தெடுக்காத விஷயங்களைச் செய்ய வேண்டும்.நாம் விரும்பியபடி எல்லாவற்றையும் செய்ய முடியாதபோது,நம் சுதந்திரத்தில் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம். இருப்பினும்,கர்த்தர் இந்த உலகத்தைப் சிருஷ்டித்த விதத்தின் ஒரு பகுதி அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக இயேசு கிறிஸ்து வரவில்லை. நாம் கர்த்தருக்கு கீழ்ப்பணிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - அதைத்தான் இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரியாகக் காட்டினார்.