Translations:Start/2/ta

பணித்தாள்களை அச்சிடுதல் =

நீங்கள் இதில் உள்ள எல்லா உள்ளடக்கங்களையும் நிகழ்நிலை(online)மூலம் காணலாம்,இணைய தளம் உள்ள இடங்களில் அவற்றைப் பயன்படுத்தலாம்,ஆனால் அனைத்துப் பணித்தாள்களும் PDF ஆகக் கிடைக்கும். நீங்கள் அவற்றை எப்போதும் பதிவிறக்கம் செய்து உங்கள் திறன்தொலைபேசியில் (smartphone) வைக்கலாம், அவை எப்போதும் கிடைக்கும்.மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் நீங்கள் அச்சிடலாம்: ஒவ்வொரு பணித்தாளும் அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு தாளில் பொருந்தும்.நீங்கள் அடிக்கடி மற்றவர்களுக்குப் பயிற்சியளித்தால் இந்த யோசனை உங்களுக்கானது: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில பணித்தாள்களை மட்டும் அச்சிட்டு,அவற்றை ஒரு கோப்பு உறையில் வைக்கவும் அல்லது அவற்றை மடித்து, நீங்கள் வழக்கமாக எடுத்துச் செல்லும் பையில் வைக்கும்போது,அவற்றை நீங்கள் எப்போதும் உங்களோடே வைத்திருப்பீர்கள்,மேலும் வெவ்வேறு சூழ்நிலைக்கும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்.