Version: 1.0

பணத்தைக் கையாளுதல்

Other languages:
More information about Tamil

அனைவரிடமும் நிறைய அல்லது மிகக் குறைவாக - பணம் இருக்கிறது.இந்த விடயம் அல்லது தலைப்பு தொடர்ந்தும் உள்ளது. நாம் பணம் சம்பாதிப்போம், சாமான் வாங்கக் கடைகளுக்குச் செல்வோம், விலைகளைப் பார்க்கிறோம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட விலைக்கு மதிப்புள்ளதா என்பதைத் தீர்மானிக்கிறோம்: ஒவ்வொரு நாளும் நம்மிடம் உள்ள பணத்தை என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

இதை நினைவில் கொள்வது முக்கியம்:பணம் ஒரு கருவி. அதே வங்கி நோட்டு மூலம் நான் ஆசீர்வாதத்தை அல்லது தீங்கைக் கொண்டு வர முடியும்.நம்முடைய பணம் மற்றும் உடைமைகளை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதற்கு நாமே பொறுப்பாளிகள் - கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்ததற்கு நிட்சயமாகக் கணக்குக் கேட்பார்.

இயேசு கிறிஸ்து பணத்தைப் பற்றி அடிக்கடி பேசினார். அன்றும் இன்றும் அதே கேள்வி உள்ளது: பணத்தை எப்படி சரியாக கையாள்வது? அவரது காலத்தில் அதிக தொழில்நுட்பம் இல்லை, பணத்தை கையாள்வது இப்போது இருப்பது போல் வசதியாக இருக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படை இன்னும் அப்படியே உள்ளது: பணம் நமது உந்துதலை, செயல் திறனை வெளிப்படுத்துகிறது. இது நமக்கு உண்மையிலேயே முக்கியமானது என்ன என்பதைக் காட்டுகிறது.

நமது இருதயங்களைப் பார்க்கிறது

பணம் என்ற விடயத்தை அல்லது தலைப்பை நாம் கண்ணாடி போல் பயன்படுத்தலாம் மற்றும் நமக்குள் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைத் தேடலாம்:

சுயநலம்
நம்மை நாமே சுற்றி வருகிறோம். “எல்லாம் என்னுடையது! நான் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை!"
பொறாமையும் மற்றும் பேராசையும்
நம்மிடம் இருப்பதில் நாம் திருப்தி அடையவில்லை. நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து,“என்னை விட அவரிடம் சிறந்த ஒன்று இருக்கிறது! அது எனக்கும் வேண்டும்!”
ஆணவம்
"நான் மற்றவர்களை விட சிறந்தவன்.என்னைப் பார்!”
கவலையும் மற்றும் பயமும்
“என்னிடம் போதுமானதாக இல்லை.நான் எப்படி உயிர் வாழ்வேன் என்றால்...?"

இவற்றில் எவற்றை உங்கள் இருதயத்தில் காண்கிறீர்கள்? கர்த்தரிடம் மன்னிப்பு கேளுங்கள்.

நியாயமாக இருங்கள்

பணத்தால் ஆசை வரும். வேலையிலாயினும் சரி, பக்கத்து வீட்டார்கள் உடனாயினும் மற்றும் நண்பர்களுடனாயினும் சரி, அல்லது அரசுக்கு வரி செலுத்தும் போதும் சரி: மற்றவர்களை ஏமாற்ற வழிகள் உள்ளன. சில வெளிப்படையாகவே சட்டவிரோதமானவை, மற்றும் தெளிவில்லாத சில பகுதிகளும் உள்ளன,சில வழிகள் சட்டப்பூர்வமாக இருக்கலாம்,ஆனால் அவை இன்னும் நியாயமற்றவைகளே. ஆனால் இயேசு ஒருபோதும் மக்களை ஏமாற்றவில்லை, "மற்றவர்கள் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்"(லூக்கா 6:31) மற்றும் "வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்"(லூக்கா 10:7) என்று தெளிவாகக் கூறினார்.

நாம் மற்றொரு நபரை ஏமாற்றும்போது,அவருக்கு ஏற்படும் தீங்கு பெரும்பாலும் வெளிப்படையானது,எனவே அவர்களை ஏமாற்றுவதில் நாம் அதிக தயக்கம் காட்டலாம்.இருப்பினும்,அது ஒரு பெரிய நிறுவனமாகவோ அல்லது எங்கள் அரசாங்கமாகவோ இருக்கும்போது,எங்களுக்கு குறைவான தடைகள் இருக்கலாம்.எனினும்,தவறு தவறாகவே உள்ளது.

கர்த்தவே,நான் எங்கே மற்றவர்களை அநியாயமாக நடத்தினேன்?நான் எங்கே சட்டங்களை மீறினேன் கர்த்தவே,நான் எங்கே மற்றவர்களை அநியாயமாக நடத்தினேன்?நான் எங்கே சட்டங்களை மீறினேன்? அல்லது அவற்றைக் குறுக்கு வழிகளில் மீறினேன்?

எனது பணத்தால் நான் என்ன செய்வது?

நம்முடைய பணத்தை நாம் பொறுப்புடன் கையாளவும், அவர் நம்மிடம் ஒப்படைப்பதில் நல்ல பாதுகாவலராகவும் இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.அதன் பொருள்:

  • எனது நிதி எங்கு செல்கிறது என்பதை அறிவது (கணக்குப் புத்தகம்,வரவு செலவு பயன்பாடு போன்றவற்றைப் பயன்படுத்தல்.)
  • விடாமுயற்சியுடன் அவர் என்னிடம் ஒப்படைத்ததை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல்
  • வீணாக இல்லை
  • நான் என்ன நோக்கத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்டுக்கொள்கிறேன்

நமது பணத்தை அவசியம் இல்லாதவற்றிக்குச் செலவு செய்தால்,பின்னர் மற்றவர்களைத் தங்கியிருக்கும் நிலைமைக்கு ஆளாவோம். எனவே கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் செலவு செய்வது அவசியம் (ரோமர் 13:8 ஐப் பார்க்கவும்).கடன்களைப் பெறுவதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம்: ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற பெரிய நோக்கங்களுக்கு அந்த வழிகளில் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் கடன்களை பெறுவதற்கு பல மோசமான காரணங்கள் உள்ளன.உதாரணமாக:நான் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கிறேன், மேலும் நான் மிகவும் அற்புதமான விடுமுறையை கழிக்க விரும்புகிறேன் அல்லது விளம்பரங்களைப் பார்த்து என்னால் வாங்க முடியாத புத்தம் புதிய பொருட்களை வாங்க விரும்புகிறேன்.

கர்த்தாவே,நான் என்ன நோக்கங்களுக்காக வேலை செய்து பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? கர்த்தாவே நான் எங்கே பணத்தை வீணாக்குவது?

பெறுவதும் கொடுப்பதும்

கர்த்தர்,நம்மைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நல்ல தந்தை என்று கூறுகிறார்.இதை நாம் சந்தேகிக்கலாம்,ஆனால் உண்மை என்னவென்றால், நம்மால் முடிந்ததை விட அவர் நம்மை நன்றாக கவனித்துக்கொள்கிறார். நம்மிடமுள்ளவை எல்லாம் நமக்குக் கர்த்தரிடமிருந்து கிடைத்தவைகளே,அதனால் அவருக்கு நன்றி செலுத்த பல காரணங்கள் உள்ளன.

நாம் அனைவரும் நமது வாழ்க்கையைச் சிறிய குழந்தைகளாகத் தொடங்க மட்டுமே பெற்றுக் கொண்டோம்.நாம் வளர்ந்து, நம்முடைய சொந்த வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் பொறுப்பேற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நமக்குக் கொடுக்கப்பட்டதைப் பகிர்ந்து கொள்வதும்,கர்த்தர் விரும்புவதில் முதலீடு செய்வதும் இதன் பொருள். கர்த்தர் நமக்குக் கொடுக்க விரும்புவதைப் போலவே, நாமும் நம்மிடமுள்ளவற்றைத் தாராளமாகக் கொடுக்க விரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

கர்த்தருடைய ராஜ்யத்தில் நீங்கள் எப்படி முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் பயிற்சியாளரிடம் பேசுங்கள்.

எனது குறிக்கோள்கள்

கர்த்தாவே, இந்த தலையங்கங்களில் எதைப் பற்றி என்னுடன் குறிப்பாகப் பேச விரும்புகிறீர்கள்?

இன்று கர்த்தர் உங்களுக்குக் காண்பித்ததை நீங்கள் எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவீர்கள் என்பதற்கான குறிக்கோள்களை அமைக்கவும்.அதற்கு ஒரு நல்ல பயிற்சியாளரிடம் ஆதரவு கேளுங்கள். வெறுமனே விற்பனைக்குத் தயாரித்த பொருளாயிராது, வெளிப்படையான, புத்திசாலியான ஒருவரைத் தேடுங்கள்.

பணத்தை நல்ல முறையில் கையாள்வதில் உள்ள மிகப்பெரிய தடைகள் பெரும்பாலும் நம் இதயங்களில் காணப்படுகின்றன. விடுதலை பெற, “பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்புக் கோருதலும் மனந்திரும்புதலும்” மற்றும் “வண்ண கண்ணாடிகளை அகற்றுதல்” ஆகிய பணித்தாள்களை ஒரு உதவியாளருடன் சேர்ந்து பார்க்கவும்.(கேள்வியுடன் தொடங்கவும்: "கர்த்தவே, நான் எந்த கண்ணாடி மூலம் பணத்தைப் பார்க்கிறேன்?")