Version: 1.0

ஒரு ஜெப(பிரார்த்தனை) நேரத்திற்குப் பிறகு எப்படி தொடர்வது

Other languages:
More information about Tamil

கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் சில ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார்:அவர் பொய்களை வெளிப்படுத்தி, அதற்குப் பதிலாக உண்மையைக் கொண்டு வந்திருக்கிறார்,அதனால் நீங்கள் சுதந்திரமாக (விடுதலை பெற்றவர்களாக)வாழ முடியும் - நீங்கள் முன்னர் சுமந்திருந்த சுமைகளிலிருந்து விடுதலை பெறுங்கள்.இப்போது இந்த உண்மைகளைப் பயன்படுத்துவது உங்களிலேயே தங்கியுள்ளது.இதற்கு நேரம் எடுக்கும் மற்றும் ஜெப-பிரார்த்தனை நேரத்தைப் போல உற்சாகமாக உணராமல் இருக்கலாம்,ஆனால் கர்த்தரின் பார்வையில் இது மிகவும் முக்கியமானது.இந்த விடுதலையை -சுதந்திரத்தைப் பயன்படுத்தவும் பராமரிக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

யோவான் 8:31-32ல் இயேசு கிறிஸ்து கூறுகிறார்:
"நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீடராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்."

கர்த்தர் இப்போது உங்களை விடுதலையாக்கிய சுமைகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன: அவை உங்களில் ஓர் அங்கமாகவே இருந்தன,அவை உங்கள் எண்ணங்களையும் உங்கள் செயல்களையும் பாதிக்கின்றன.எனவே இந்தக் காகிதத் துண்டை எடுத்து (யோவான் 8:31-32)ஒவ்வொரு நாளும் இந்த சத்தியத்துடன் ஜெபித்து,அவர் சொன்ன எல்லாவற்றிற்கும் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.அந்த வகையில் இந்த சத்தியங்கள் உங்கள் இருதயத்தில் நிலைபெற்று உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் சென்றடையலாம்.இந்த மாற்றத்திற்கு எதிரான எதிர்ப்பை நீங்கள் (மனதில்) உள்ளே இருந்தும்(உங்கள் சந்தேகங்களும் சோம்பலும்) அல்லது வெளியே (மற்றவர்கள் உங்களில் ஏற்பட்ட மாற்றத்தை விரும்புவதில்லை) இருந்தும் கடக்க வேண்டியிருக்கலாம். இது சவாலாக இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் முற்றிலும் புதிய மனநிலையையும் புதிய நடத்தையையும் கற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தர் உங்களுக்கு தேவையான பலத்தை கொடுக்க விரும்புகிறார் - அவருடன் நேரத்தை செலவிடுங்கள், விட்டுவிடாதீர்கள்!

விதைகளின் விளக்கம்

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த சத்தியங்கள் நீங்கள் பெற்ற சிறு விதைகள் போன்றவை. அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வளரவும் நல்ல பலனைக் கொண்டுவரவும் இப்போது நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் (லூக்கா 8:4-15 ஐயும் படியுங்கள்).

இந்த விதைகள் வளர நல்ல சூழலை வழங்குவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த சத்திய வசன உண்மைகளை நீங்கள் நினைவூட்டுதல்,கர்த்தரோடு நேரத்தைச் செலவிடுதல்,

அவர் சொல்லுகிறவைகளுக்குக் கீழ்படிவதல் ஆகியவற்றின் மூலம் இந்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள். எதிரியின்(சாத்தானின்) "பறவைகளை" நீக்கி (விலக்கி)வையுங்கள்:பழைய முறைகளும் பொய்களும் திரும்பி வந்து இந்த புதிய சத்தியத்தைத் திருடும். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்தவைகளைப் பயன்படுத்தி அவைகளை எதிர்த்துப் போராடுங்கள். நல்ல ஐக்கியம்,(கூட்டுறவு) அதிக பயிற்சி என்பவற்றால் விதைகளுக்கு உரமிடுங்கள்.

கர்த்தருடன்

ஜெப-பிரார்த்தனை நேரத்திலிருந்து கொள்கைகளை உருவாக்க, உங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றுங்கள்

விபரங்களுக்குமன்னித்தல் படிப்படியாக மன்னித்தல்” என்ற பணித்தாளைப் பார்க்கவும்).

கர்த்தாவே,நான் யாரை மன்னிக்க வேண்டும்?

பாவங்களை அறிக்கையிடுதல் (விவரங்களுக்கு “பாவங்களை அறிக்கையிட்டுதலும் மனந்திரும்புதலும்” என்ற பணித்தாளைப் பார்க்கவும்)

கர்த்தாவே,நான் எங்கே உம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

உங்களுடன்

கர்த்தர் உங்களிடம் பேசிய ஒவ்வொரு விஷயத்தையும் சிந்திக்கப் போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்:

நான் இப்போது என் வாழ்க்கையில் இதை எந்தளவு நன்றாகப் பயன்படுத்துகிறேன் இதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் என்ன தடையாக இருக்கிறது? இங்கு,எனது அடுத்த படி என்ன?

நண்பர்களுடன்

நாம் மட்டும் எல்லாவற்றையும் தனிமையாய்ச் செய்வதற்காக நாங்கள் உருவாக்கப்படவில்லை. நம்மை ஊக்குவிக்கும்,மற்றும் திருத்தும் சரியான நண்பர்கள் நமக்குத் தேவை.

எனக்கு என்ன ஆதரவு -உதவி தேவை? நான் யாரிடம் உதவி கேட்பது?

கர்த்தர் என்ன எனக்குக் காட்டினார்: