அத்தியாவசியமானவை

Other languages:
More information about Tamil

சீஷடத்துவப் பயிற்சிக்கு அடிக்கடி தேவைப்படும் "அத்தியாவசிய" ஆதாரங்களை இந்தப் பகுதியில் காணலாம்.

முதல் பயிற்சிப் பாடங்கள்

கர்த்தரின் கதை

இந்த முதல் பாடத்தில் கர்த்தரின் திட்டம் மற்றும் என்ன அவர் நம்மிடமிருந்து விரும்புகிறார் என்பது பற்றிய சுருக்கம் உள்ளது.ஒரு புதிய விசுவாசிக்கான முதற் பயிற்சிப் பாடமாக இதை உடனடியாகப் பயன்படுத்துங்கள்,இதனால் அவர் இதன் அர்த்தத்தை உண்மையில் புரிந்து கொள்ள முடியும். மற்றும் அதை மற்றவர்களுக்கு எவ்வாறு விளக்குவது என்பதையும் கற்றுக்கொள்கிறார்.

ஞானஸ்நானம்

ஞானஸ்நானம் கொடுக்க ஒழுங்கு பண்ணுவதற்கு இந்தப் பாடத்தைப் பயன்படுத்தவும். மக்கள் தங்கள் தீர்மானத்திற்குப் பிறகு விரைவாக ஞானஸ்நானம் பெற்றதை நாம் வேதாகமத்தில் காண்கிறோம்.முதல் பாடத்திற்குப் பிறகு அல்லது பயிற்சியின் வேறு எந்தப் நிலையிலும் இந்தப் பாடத்தைப் பயன்படுத்தலாம்.

ஜெபம்

இரண்டாவது பாடமாக இது கர்த்தருடனான நமது உறவு பற்றிய அடிப்படை புரிதலை அளிக்கிறது.நீங்கள் ஒருவரைப் பயிற்றுவிக்கும் போது பல்வேறு வகையான ஜெபங்களைப் பயிற்சி செய்யவும் மறக்காதீர்கள்!

படிப்படியாக மன்னித்தல்

மன்னிப்புப் பற்றிய சுருக்கம்: மன்னிப்பது என்றால் என்ன, அதை எப்படி செய்வது மற்றும் அந்தச் செயல்பாட்டில் மற்றவர்களுக்கு எப்படி உதவுவது.

=

பாவ அறிக்கை செய்து மனந்திரும்புதல்

மனந்திரும்புதலின் சுருக்கம்: நாம் எப்படி பாவங்களை அறிக்கை செய்து அவற்றிலிருந்து விலகுவது?

=

கர்த்தருடனான நேரம்

கர்த்தர் நமக்கு கற்பிக்க விரும்புகிறார்.அவருடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவரிடமிருந்து அதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.இதை எப்படி செய்வது என்று இந்தப் பாடம் விளக்குகிறது மற்றும் வேதாகமத்திலிருந்து மக்கள் கர்த்தருடன் தமது நேரத்தை எப்படிச் செலவிட்டனர் என்பது பற்றிய சில உதாரணங்களைக் காட்டுகிறது.

கர்த்தரிடம் இருந்து கேட்பது

கர்த்தர் எல்லோரிடமும் பேச விரும்புகிறார் ஆனால் அவரிடமிருந்து நாம் எப்படி கேட்க முடியும்? இந்த பாடம் கர்த்தர் நம்முடன் உறவு கொள்ளும் பல்வேறு வழிகளையும் அவருடைய குரலை எவ்வாறு பகுத்தறிவது என்பதையும் விளக்குகிறது.

திருச்சபை/தேவாலயம்

நாங்கள் தனியாக இல்லை. இயேசுவைப் பின்பற்றும் பிற விசுவாசிகளுடன் சேர்ந்து நாம் ஒரு சமூகம் அல்லது ஐக்கியத்தை உருவாக்குகிறோம். இந்த பாடம் திருச்சபை/தேவாலயம் என்றால் என்ன,மற்றும் அது என்ன செய்கிறது என்பதை விளக்குகிறது.

குணப்படுத்துதல்

குணமடைய ஜெபம் செய்வது எப்படி: தொடங்குதல், அப்பொழுது குணமடையவில்லை எனத் தோன்றினால் என்ன செய்வது, மேலும் முக்கியமான பல குறிப்புகளும் 0உள்ளன.இந்தப் பணித்தாள்களை நீங்கள் யாருக்காக ஜெபம் செய்கிறீர்களோ அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்த்தருடனான எனது கதை

கர்த்தர் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்து இருப்பதை: எப்படி அதை மற்றவர்களுக்கு விளக்குவது?

சந்திப்புக்கான ஒரு வரைவு

வேதாகம வாசிப்பிற்கான குறிப்புக்கள்

கர்த்தருடைய சத்தியத்தைப் படிக்கத் தொடங்க விரும்பும் மக்களுக்கான சில குறிப்புக்கள், மற்றும் கண்டுபிடிப்புக்கள் வேதாகமப் படிப்புக் கூட்டத்திற்கான வரைவு(இந்த அடிப்படையில் [[|The Three-Thirds Process|மூன்று-மூன்றில் செயல்முறை]]) இந்த சிறிய பணித்தாள் கொண்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்டு நான்கு சிறிய புத்தகக்குறிகளாக வெட்டக்கூடிய அச்சு பதிப்பும் உள்ளது.

மூன்று-மூன்றில் செயல்முறை

பயிற்சி கூட்டத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கொண்ட வரைபடம். ஒவ்வொரு பயிற்சிக் கூட்டத்திற்கும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தவும் மற்றும் "பாடம்" என்ற பிரிவில் ஒவ்வொரு முறையும் சிஷ்யத்துவப் பாடங்களில் ஒன்றைக் கற்பிக்கவும்.

பயிற்சி கூட்ட வரைவு

மூன்றில்-மூன்று பங்கு செயல்முறையை இன்னும் விரிவாக விளக்குதல்: பயிற்சிக் கூட்டத்தின் வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு நிரப்புவது மற்றும் அவற்றில் சில ஏன் மற்றவைகளை விட முக்கியமானவை.

ஒரு தினசரி ஜெபம்

இந்தப் பணித்தாளை இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்டு எட்டு சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். இது சரியானது உதாரணமாக:உங்கள் பணப்பையில் அதை எப்போதும் வைத்திருந்து, அதை ஒவ்வொரு நாளும் ஜெபத்துக்குப் பயன்படுத்தவும்!