Version: 1.1

ஜெபம் பண்ணுதல்.

நாம் ஏன் ஜெபம் பண்ணவேண்டும்?

ஜெபம் என்பதன் பொருள்:கர்த்தரோடு பேசுவதாகும்.இது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்குச் சுவாசம் போன்றது. கர்த்தர் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் மற்றும் உங்களுடன் ஒரு உறவை விரும்புகிறார்.இது மற்ற உறவுகளைப் போலவே உள்ளது.நாம் அடிக்கடி மற்றும் நேர்மையாக ஒருவருக்கொருவர் பேசினால் உறவு ஆழமாகவும் வலுவாகவும் மாறும்.

மத்தேயூ.6:5-13

ஜெபத்தைப் பற்றி நாம் இங்கே என்ன கற்றுக்கொள்கிறோம்?


ஆறு வகையான ஜெபங்கள்

கர்த்தரைத் துதித்தல்.(புகழுதல்)
அவர் யார் என்பதற்காக கர்த்தரை ஆராதனை செய்யுங்கள். (சங்கீதம் 34:2)
நன்றி கூறுதல்
கர்த்தரின் கருணை, மற்றும் பாதுகாப்புக்காக நன்றி.

(1 தெசலோனிக்கேயர் 5:18)

புலம்பல்.
உங்கள் வலியைக் கூக்குரலிட்டு, உங்கள் குறைகளைக் கர்த்தரிடம் தெரிவியுங்கள்.

(சங்கீதம் – 13: 1-3)

பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புக்கொடுத்தல்.
உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். (1 யோவான் 1:9)
விண்ணப்பங்கள்.
உங்களின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கர்த்தரிடம் கேளுங்கள்.

( பிலிப்பியர் – 4: 6-7)

மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபம் செய்தல்.
மற்றவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி கர்த்தரிடம் கேளுங்கள்.(1 தீமோத்தேயு 2 :1)

கர்த்தரின் சித்தம் எவ்வாறு நமது ஜெபத்தினைப் பாதிக்கும்

கர்த்தரின் சித்தத்தைப் பற்றிய மூன்று வித்தியாசமான வகை ஜெபங்கள் உள்ளன.

  1. கர்த்தர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்.
    உதாரணம்:"கர்த்தரே,நான் மீண்டும் ஒருமுறை, வேறு ஓர் இடத்தில் பிறக்க விரும்புகிறேன்".
    → நீங்கள் எவ்வளவு தான் ஜெபம் செய்தாலும் எதுவுமம் மாறாது.
  2. நாம் ஜெபிப்பது உண்மையில் நமக்கு நல்லதல்ல என்பது கர்த்தருக்குத் தெரியும். அதற்காக நாம் இடைவிடாது தொடர்ந்தும் ஜெபிப்பதால்,

கர்த்தர்,உண்மையில் நம்மிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கேட்காததினால்,இதன் விளைவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையோடு அவர் இறுதியில் ‘சரி’ எனக் கூறுகிறார்.
உதாரணமாக,ஒரு சிறு குழந்தை தனது பெற்றோரிடம் வந்து,ஒரு கோப்பைத் தண்ணீரை மேசைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறது.அந்த மேசை அவளை விட மிக உயரத்தில் இருப்பது பெற்றோருக்கு தெரியும்,எனவே அந்தக் குழந்தையிடம் அந்தக் கோப்பையைத் தம்மோடு சேர்ந்து கொண்டு செல்ல அறிவுறுத்துகிறார்கள். ஆனால்,அந்தக் குழந்தையோ பிடிவாதமாக இருக்கிறது. "இல்லை நான் செய்கிறேன். "!.கடைசியில் பெற்றோர்கள் சம்மதிக்கிறார்கள். ஆனால்,அவர்கள் எதிர்பார்த்தது போலவே,குழந்தை கோப்பையைக் கைவிடுகிறது.
பெற்றோர் குழந்தையை ஆறுதல்படுத்தி,உலர்ந்த துணிகளைக் கொடுத்து, தண்ணீரைத் துடைக்கிறார்கள். மீண்டும்,குழந்தையை அவர்கள் கோப்பையைத் தம்மோடு சேர்ந்து எடுத்துச் செல்லுமாறு சொல்லுகின்றனர்.இந்த முறை குழந்தை ஒப்புக் கொண்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி இருக்கிறார்கள்.
நீங்கள் ஜெபிப்பது உண்மையிலே நல்லதா?நீங்கள் சரியான நோக்கங்களுடன் ஜெபிக்கின்றீர்களா?
இதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

  1. கர்த்தரின் சித்தத்தின்படியே நாம் ஜெபிக்கிறோம்.
    → கர்த்தர் அதைச் செய்வார்! கர்த்தருடைய சித்தத்தைப் பற்றி மேலும் அறிந்து அதற்காக ஜெபிக்கவும். (1 யோவான் 5:14)

வீதிகளிலுள்ள போக்குவரத்து விளக்குகள்:நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தர் அளித்த பதிலின் படம்.

"ஆம்." பச்சை விளக்கு. கர்த்தர், உங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு,நிறைவேற்றுகிறார்.
"இல்லை." சிவப்பு விளக்கு: கர்த்தர் உங்கள் வேண்டுதலை ஏற்கவில்லை. அவரிடம் வேறு அபிப்பிராயம் உள்ளது.
"காத்திரு." மஞ்சள் விளக்கு கர்த்தர் பதிலளிக்கவில்லை

(இன்னும்). எனவே,நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

கர்த்தர் சொல்லுவதைக் கேட்பது.

நாம் கர்த்தரிடம் பேசுவது போலவே,அவரும் நம்மிடம் பேச விரும்புகின்றார்.நாம் அவருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ,அவ்வளவு அதிகமாக அவருடைய குரலை நாம் நன்கு அறிவோம்.இதற்கான நான்கு முக்கிய கொள்கைகள் இங்கே: கர்த்தருக்கு முன்பாக அமைதியாக இருப்பது: நீங்கள்,உங்கள் மன எண்ணங்களைத் திசை திருப்பமுடியாத ஒர் இடத்தைக் கண்டுபிடி, அங்கே உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த நேரம் கிடைக்கும்.எல்லா விடயங்களும்,உங்கள் தலையில் இன்னும் குழப்பிக் கொண்டிருக்கும் எல்லா விடயங்களுக்கும்:இவைகளை கர்த்தரிடம் விட்டுவிடுங்கள். அல்லது பின்னர் ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் கர்த்தர் மீது கவனம் செலுத்தலாம்.

பார்த்தல்
கர்த்தர் கேட்கக் கூடிய குரலில் அரிதாகவே பேசுகிறார்,எனவே,நீங்கள் முக்கியமாக உங்கள் காதுகளில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.அதற்குப் பதிலாக கர்த்தர் நமது கற்பனையைப் பயன்படுத்த விரும்புகின்றார்,மேலும் நம் "மனக்கண்" முன் அடிக்கடி நமக்கு விடயங்களைக் காட்டுகிறார்.
தன்னிச்சையான எண்ணங்கள்
நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றவுடன்,அவர் நம் சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறார்.நாம் அவருக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறோமோ,அவ்வளவு அதிகமாக அவர் நம் எண்ணங்களையும் வடிவமைப்பார்.கர்த்தர் அடிக்கடி பெலத்த சத்தமாகப் பேசுவதில்லை,நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் மூலம் மென்மையாகப் பேசுவார்.
எழுதுதல்
கர்த்தருடனான உரையாடலை எழுதுவது உதவியாக இருக்கும், அதில் அவருக்கான நமது கேள்விகளும்,மற்றும் பதில்களாக நாம் பெற்ற எண்ணங்களும் அடங்கும்.ஒவ்வொரு எண்ணத்தையும் மெல்ல வேண்டாம்,அது கர்த்தரிடமிருந்து வந்ததா அல்லது இல்லையா என்று கேட்கவேண்டாம், மாறாக பிரித்தெடுக்காமல் எல்லாவற்றையும் எழுதுங்கள்.சில விடயங்கள் உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் பின்னர் நீங்கள் மேலும் சரிபார்க்கலாம்.

(ஒப்பிடுக ஆபாகூக் 2:1-2)

மேலதிக குறிப்புக்கள்.

  • நாம் இன்னொருவருடன் பேசுவதைப் போல

கர்த்தரோடு பேசலாம். நம் இதயத்தில் நாம் சொல்வதை அவர் கேட்கின்றார். குறிப்பாக,நாம் மற்றவர்களுடன் ஒன்றாக இருக்கும்போது "சத்தமாக ஜெபிப்பது" நல்லதுஅது கர்த்தரோடு அனைவரும் சேர்ந்து நடத்திய உரையாடலாக மாறும்.

  • சில சமயங்களில் நம் ஜெபத்தில்விடாமுயற்சி தேவை "பின்னர் இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார், அவர்கள் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டுமென்றும் ஜெபத்தைக் கைவிடாதிருக்க வேண்டுமென்றார்.”(லூக்கா 18.1)
  • நாம்எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஜெபிக்க முடியும்.
  • நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கின்றோம்.(யோவான்14:13)கர்த்தர் தனது பெயரால் செயல்பட உங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார்.இயேசு கிறிஸ்து ஜெபித்திருப்பதையே நாமும் ஜெபிக்க வேண்டும். பின்னர் நாம் "அவருடைய சித்தம்"என்று ஜெபிக்கிறோம்,அவர் பதிலளிப்பார்.முக்கியமானது: "இயேசு கிறிஸ்துவின் பெயரால்"என்பது ஒரு மந்திர சூத்திரமல்ல,இதன் மூலம் ஒரு ஜெபம் தானாகவே அதிக சக்தி வாய்ந்ததாக மாறும்.
  • ஜெபத்தில் நாம் பயன்படுத்தக் கூடிய அதிகாரத்தைஇயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.அதாவது நாம் விஷயங்களை அறிவிக்கலாம் (உதாரணமாக,ஆசீர்வாதங்களைப் பேசுவது,பாவத்தை நிராகரிப்பது அல்லது எதிர்மறையான ஆன்மீக பழக்க வழக்கங்களைக் துறப்பது).நாம்,நோய் அல்லது பேய்கள் வெளியேறும்படி கட்டளையிடலாம்(லூக்கா 9: 1-2).

விண்ணப்பம்

ஆறு வகையான ஜெபங்களில் (போற்றித் துதித்தல்,நன்றி கூறுதல்,புலம்பல்,பாவங்களை அறிக்கையிடுதல், விண்ணப்பங்கள்,பரிந்துரைகள்)எதை உங்கள் ஜெப வாழ்க்கையில் அதிகமாக ஒருங்கிணைக்க விரும்புகிறீர்கள்?

நீங்கள் கர்த்தரிடம் என்ன கேள்விகளைக் கேட்க விரும்புகிறீர்கள்?எங்கே, எப்போது நல்ல நேரம்?

எனது குறிக்கோள்கள்