Version: 2.1

ஞானஸ்நானம்

கதை

(மத்தேயு 3:11, 13:17, 28:18-20)

இயேசு கிறிஸ்து போதிப்பதற்கும், நோயுற்றவர்களைச் சுகப்படுத்துவதற்கும் சற்று முன்னராக,அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்ச் சென்றார்.மக்களைத் தங்கள் பாவங்களிலிருந்து மனம் திரும்புங்கள்,மீட்பர் மிக விரைவில் வரவிருக்கிறார் என யோவான்ஸ்நானன் என்ற பெயருடைய தீர்க்கதரிசி ஒருவர்,அங்குள்ள மக்களை வரும்படி அழைத்தார்.இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வரவுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

இயேசு கிறிஸ்து பாவமன்னிப்புக் கேட்க அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. எனினும்,இயேசு யோவான்ஸ்நானனின் போதனையை ஏற்று,அவர்,இயேசுவை ஞானஸ்நானம் செய்யவேண்டுமென்றும்,அது நமக்கோர் உதாரணமாக இருப்பதற்கும்,அதனை நாமும் பின்பற்றுவதற்கும், யோவான்ஸ்நானன் இயேசுவை ஞானஸ்நானம் செய்தார் இயேசு கிறிஸ்துவை அவர் முதலில் ஞானஸ்நானம் செய்ய விரும்பவில்லை. யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவிடம் “நான் உம்மால் அல்லவோ ஞானஸ்நானம் பெறப்பட்டிருக்கவேண்டும்” என்றார்.இயேசு தம்மிலும் மிக உயர்ந்தவரென்பது யோவான்ஸ்நானனுக்கு நன்கு தெரியும்.எவ்வாரெனினும், பின்னர்,இயேசு யோவான்ஸ்நானனை நோக்கி"இப்போது இடம் கொடு,இதுவே செய்வதற்குச் சரியானதும்”,என்றார். அப்போது யோவான்ஸ்நானனும் அதனை ஏற்றுக் கொண்டு,இயேசு கிறிஸ்துவை ஞானஸ்நானம் செய்தார்.

இயேசு கிறிஸ்துவை யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் செய்தார். அவர் நீரின் கீழே மூழ்கி, பின்னர் அவர் நீரின் மேலே வந்தபோது,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி “என்னை நேசிப்பவரும், மிகவும் ஆனந்தமாகவுமிருக்கும் இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் நான் பிரியமாக இருக்கிறேன்” என உரைத்தது

அவருடைய ஊழியம் பூமியில் நிறைவேறிய பின்னர்,இயேசு கிறிஸ்து,அவருடைய சீடர்களுக்கு,நீஙகள் புறப்பட்டுச் சென்று, சகல உலக மக்களையும்,பிதா, குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து அவர்களைச் சீடர்களாக்கும்படி கட்டளை இட்டார்.சீடர்களும்,இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து,அவரின் கட்டளைப்படியே உலகின் எல்லா இடங்களுக்கும் சென்று,இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக விரும்பிய சகல மக்களையும் ஞானஸ்நானம் செய்தனர்.

பயிற்சி இக் கதையைத் திரும்பவும் சொல்லுதல்!

வினாக்கள்

  1. இக் கதையிலிருந்து, நீங்கள்,ஞானஸ்நானம் பற்றி என்ன கற்றுக் கொண்டீர்கள்?
  2. எதற்கு நீங்கள் கீழ்படிய வேண்டும்?

ஞானஸ்நானம் என்பதன் பொருள்

“ஞானஸ்நானம்”என்பதன் பொருள் “முழுகுதல்,அமிழ்த்துல்”அது போல,நீரால் கழுவுதல், அல்லது சுத்தப்படுத்துதல் என்பதாகும்.இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபடியினால்,அவரைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் அவரைப் போல் ஞானஸ்நானம் பெற வேண்டும்:

"...மத்தேயு சுவிஷேசத்தின் கடைசிப் பகுதியில் அவரைப் பினபற்றுவோருக்கு இட்ட கட்டளை:
“... “பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள்" (மத்தேயு. 28:19) (

மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது)>

இந்த வசனத்தின் பொருளை அப்போஸ்தலர் நடபடிகை 2:38யில் மிகவும் தெளிவாகச் சொல்லப்படுகிறது (மனனம் பண்ணும் வசனம்):

பேதுரு (Peter) அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி, பாவமன்னிப்புப் பெற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போது பரிசுத்த ஆவியின் வரத்தினைப் பெறுவீர்கள்”. (அந்த வசனங்களை ஞாபகப்படுத்தவும்).

பிதா,குமாரன்(இயேசு கிறிஸ்து), பரிசுத்த ஆவியின் நாமத்தினால் முழுகுதல்...

பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பைக் கோரலும் மனம் திரும்புதலும்

நமது பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்புக் கேட்பதினால், அபந்தப் பாவங்களிலிருந்தும் நாம் விடுபடலாம். (விடுதலை அடையலாம்) நாம் எல்லாக் குப்பை குழங்களையும் கம்பளத்தின் கீழ்பகுதியில் கூட்டித் தள்ளி விடமுடியாது. நாம்,ஒவ்வொரு பாவத்திற்கும் பெயரிட்டு,அவற்றை அறிக்கையிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் (1 யோவான் 1:9). கர்த்தரின் விருப்பத்திற்கு விரோதமாக நாம் வாழ்ந்ததை நாம் பேச வேண்டும்.நம்மை மன்னிக்கவும்,கர்த்தரை ஜெபிக்க வேண்டும்.பின்னர் இத்தகைய செயல்களை செய்வதை நிறுத்துவதற்கு உதவும்படியும் கர்த்தரிடம் நாம் கேட்க வேண்டும். கர்த்தரின் துணையோடு நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கர்த்தரின் விருப்பத்தின் பிரகாரம் நாம் வாழவேண்டும்.

குமாரனின் நாமத்தால் நீரில் முழுகுதல் (கழுவுதல்)...

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம்

தண்ணீர் ஞானஸ்நானம் என்பதை “மறு ஜென்ம முழுக்கு” என்று அழைக்கப்படும் (தீத்து 3:5). இதன் பொருளினை ரோமரில் 6: 1- 11ல் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இயேசு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததைப் போலவே,ஞானஸ்நானத்தில் தண்ணீருக்குள் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் தண்ணீரிலிருந்து வெளியே வருகிறோம். இதனால் நமது பழைய பாவ இயல்பு இறந்துவிடும்,நாம் இனி "பாவத்தின் அடிமைகள்" அல்ல.அதன் அர்த்தம்,இனி மேல் எம்மில் எந்தப் பாவமுமில்லை. நாம் இப்போது ஒரு "புதிய சிருஷ்டி" (2 கொரிந்தியர் 5:17). ஞானஸ்நானத்தில் நாம் நமது பழைய வாழ்க்கையை புதைக்கிறோம்,நமது புதிய வாழ்க்கை தொடங்குகிறது, இது முற்றிலும் புதிய வாழ்க்கை முறை இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்படுகிறது.

பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம்...

கர்த்தரின் பரிசுத்த ஆவியைப் பெறுதல்

கர்த்தர் அவருடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தர விரும்புகிறார்.பரிசுத்த ஆவி என்பது நமக்கு "கர்த்தரின் வல்லமை"போன்றது. கர்த்தரின் சித்தத்தைச் செய்யவும்,சாத்தானை எதிர்க்கவும் அவர் நமக்கு உதவுகிறார்.பரிசுத்த ஆவியின் கனிகளோ,அன்பு, சந்தோஷம்,சமாதானம்,நீடிய பொறுமை,தயவு, நற்குணம், விசுவாசம் போன்றவை.பரிசுத்த ஆவியானவர் இந்த நல்ல கனிகளை நம்மில் வளரச் செய்கிறார் (கலாத்தியர் 5:22).
நாம் கர்த்தரின் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நமக்குள் ஏதோ ஏற்படுகிறது.இது வெளியிலும் தெளிவாகத் தெரியும். (உதாரணம். அப்போஸ்தலர் நடபடிகள்:19:6). நாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வரங்களைப் பெறுகிறோம்.(கொரிந்தியர். 12:1-11.,14:1-25).இவை நமக்கு ஒரு ஆதரவாக இருக்கின்றன,மேலும் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம், இதனால் மற்றவர்களும் கர்த்தரின் வல்லமையை அனுபவிக்க முடியும்,மேலும் நாம் அவர்களை சீஷராக முடியும்.

உங்கள் ஞானஸ்நானத்திற்கு தயாராகுதல்

உங்கள் ஞானஸ்நானத்தில் உங்கள் நம்பிக்கையைக் கொண்டாடலாம்!

  • எப்போது ஞானஸ்நானம் செய்ய வேண்டும்?
  • யாரை அழைக்க வேண்டும்?
  • உங்கள் ஞானஸ்நானத்தில், கர்த்தர் உங்களை எப்படி விடுவிதித்தார் மற்றும் மாற்றினார் என்பதை அனைவருக்கும் சொல்ல கர்த்தருடனான உங்கள் கதையை நீங்கள் தயார் செய்யலாம்.

மிக விரைவில் ஞானஸ்நானம் பெற ஒரு நேரத்தை அமைக்கவும்.ஞானஸ்நானம் தொடர்பான கேள்விகளை வாசித்து அதில் ஏதாவது தெரியாத கேள்விகள் இருந்தால் அதற்குரிய விடையை அறிந்து கொள்ளவும்.

ஞானஸ்நானத்திற்குரிய கேள்விகள்

  1. உமது பாவங்களைக் கர்த்தரிடம் அறிக்கை செய்து பாவமன்னிப்புக் கேட்டீர்களா?
  2. இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம்,கர்த்தர் உங்கள் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து நம்புகிறீர்களா ?
  3. உங்களின் பழைய வாழ்க்கையைப் புதைத்துவிட்டு கர்த்தருடன் புதிய வாழ்வைத் தொடங்க நீங்கள் ஆயத்தமா?
  4. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறீர்களா,ஒருபோதும் பின்வாங்கவில்லையா?
  5. மற்றவர்கள் உங்களைக் கேலி செய்தாலும், அடித்தாலும், உங்கள் குடும்பத்தினர் உங்களை வீட்டிலிருந்து வெளியேற்றினாலும்,அல்லது உங்களுக்கு வேறு கஷ்டங்களை ஏற்பட்டாலும், நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்வீர்களா?
  6. நீங்கள், கர்த்தரின் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறீர்களா?